1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:02 IST)

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

school
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் பள்ளி விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
அரியலூர் மாவட்டத்தில் கலியுகவரதன் பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளது
 
இதனை அடுத்து நாளை அதாவது ஏப்ரல் 18-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு அலுவலர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் ஐந்தாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது