ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 டிசம்பர் 2025 (17:30 IST)

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் ரூ. 29 கோடியில் புனரமைக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 
இந்த மத நிகழ்வைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
கும்பாபிஷேக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்காமல், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கும் இந்த நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran