வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (08:01 IST)

துவங்கியது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (9 ஆம் தேதி) தொடங்கியுள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
இந்நிலையில் இன்று (9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆம், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 
 
மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இதை தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.  அன்றைய தினம் காலை 8 மணிக்கு 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.