ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (08:56 IST)

பெங்களூரு போல் சென்னைக்கும் தண்ணீர் பஞ்சம் வருமா? தமிழகத்தின் நிலை என்ன?

water
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்திற்கும் இன்னும் சில ஆண்டுகளில் இதே நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்பதும் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பெங்களூர் மக்கள் பரிதாபமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் வரலாறு காணாத மழையை சந்தித்திருப்பதால் இந்த ஆண்டு கோடையில் தமிழகத்துக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பாடு ஏற்பட்ட வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்து வருவதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஒருவேளை இந்த ஆண்டு கோடை வெப்பம் கடினமாக இருந்தால் நீர் வற்றி புறநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்றும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 90 தடுப்பணைகளில் ஆறு தடுப்பணைகள் வறண்டு போயிருப்பதாகவும் கூறப்படுகிறது 
மேலும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்த போது ஒரு சில முக்கிய நீர் நிலைகளில் சேமிப்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்ததால் 50% மேல் தண்ணீரை சேமிக்க முடியவில்லை என்றும் இதனால் வெயில் கடுமையாக இருந்தால் இந்த ஆண்டு சென்னை உள்பட தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Edited by Siva