1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (15:37 IST)

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

EVKS
பிரதமர் பதவியில் இருந்து மோடியை தூக்கினால் இந்தியாவுக்கு நல்லது நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்றதாக கூறினார்.
 
பாஜகவுக்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது என்றும் பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி மிகவும் மோசமானது என்றும் இளங்கோவன் விமர்சித்தார். 

 
பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.