1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (19:16 IST)

தனியார் பள்ளிக்குள் திடீரென புகுந்த சிறுத்தை. ஆசிரியர்கள், மாணவிகள் கடும் அச்சம்..!

திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் பள்ளிக்குள் திடீரென சிறுத்தை புகுந்தத்தை அடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வரும் நிலையில் அந்த பள்ளிக்குள் இன்று திடீரென ஒரு சிறுத்தை புகுந்தது . ஏற்கனவே நேற்று முன்தினம் ஜெயராம் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை சுற்றித்திரிந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனை அடுத்து வனத்துறையினர் வலைகள் மூலம் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென தனியார் பள்ளிக்குள் புகுந்து அதன்பின் பள்ளியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
 
மேலும் அந்த பள்ளியில் உள்ள மாணவிகள் அனைவரும் பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒலிபெருக்கிகள் மூலம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வனத்துறை அதிகாரிகள் வழவழக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran