இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. முதல் நாளில் மாணவர்களுக்கு என்னென்ன வழங்கப்படுகிறது?
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல் நாளே மாணவ மாணவிகளுக்கு என்னென்ன வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளன.
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. சுமார் 70 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இன்று பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், புவியியல் வரைபடங்கள், புத்தகப்பை, காலணிகள், மழை கோட்டுகள், சீருடைகள், வண்ண பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் உட்பட மாணவ மாணவிகளின் படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் சீருடை உடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று ஏற்கனவே போக்குவரத்து துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva