செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (10:15 IST)

ஆட்டோ ஓட்டி விஜயதசமி கொண்டாடிய ‘லெஜண்ட்’ சரவணன்!

Legend Saravanan
நேற்று விஜயதசமி அன்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணா ஆட்டோ ஓட்டுனர்களுடன் விஜயதசமியை கொண்டாடியுள்ளார்.



சென்னையில் பிரபலமாக பல பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மார்க்கெட் சரவணா ஸ்டோர்ஸ். இதன் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். சமீபத்தில் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் “லெஜண்ட்” என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் லெஜெண்ட் சரவணன். தினசரி ஏழை மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல உதவிகளையும் செய்து வருகிறார் லெஜண்ட் சரவணன்.

நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்ட நிலையில் தி நகரில் உள்ள தனது கடை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு பரிசு பைகளை வழங்கி விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “இரண்டே விஷயங்கள்தான் எப்போதுமே என் வாழ்வில் முக்கியமானது. அதையே எல்லாரும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். முதலாவது கடினமாக உழைப்பது, இரண்டாவது அனைவரிடமும் அன்பு செலுத்துவது. இரண்டுமே நமக்கு அதற்கான பலனை பன்மடங்காக திருப்பி தரும்” என கூறியுள்ளார்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களுடைய ஆட்டோவில் சரவணன் ஒருமுறை வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நானே ஆட்டோவை ஓட்டுகிறேன் என்று சொன்ன சரவணன் ஓட்டுனர்களை பின்னால் அமர வைத்து தி நகர் சாலையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K