1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (13:21 IST)

வேற லெவல் லுக்கில் லெஜண்ட் சரவணன்.. விரைவில் அடுத்த பட அறிவிப்பு..!

Legend Saravanan
லெஜன்ட் 
சரவணன் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேற லெவல் லுக்கில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
லெஜன்ட் சரவணன் நடித்து தயாரித்த லெஜண்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 
 
இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படங்களை எடுத்து பதிவு செய்துள்ளார்
 
வேற லெவல் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் விரைவில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.




 
Edited by Siva