மாஸ்டர் படத்தில் தந்தையை நடிகராக்கிய நடிகர் !
மாரிராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்து மக்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கதிர். இவர் பிகில் படத்தில் நடிகர் விஜயுடன் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இவரது தந்தை நடிகராக அறிமுக ஆகவுள்ளார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் கதிர்.
இவரது அப்பாவுக்கு பிறந்த நாளான இன்று வாழ்த்துகள் கூறி, இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் அவர். அதில் என் அப்பாவின் நடிப்புக் கனவு 53 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.