திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 23 மே 2016 (11:01 IST)

நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் மே 18 அன்று அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தென்னிலை பகுதியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர் உலகநாதன் கொடுத்த புகாரின்படி, தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.