போராட்டகாரர்களை அடித்து விரட்ட ஆணை பிறப்பித்த மதுரை ஆட்சியர்!!
மதுரையில் உள்ள அலங்காநல்லூர் மற்றும் தமுக்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதாரவு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர சட்டம் கொண்டுவந்தும், நிறந்தர சட்டம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். மேலும் ரயிலை சிறைப்பிடித்தும் போராடம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் அலங்காநல்லூர் மற்றும் தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு 30 நிமிட கால கெடுவை மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் விதித்தார்.
அப்போழுதும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும் போராட்டகாரர்கள் கலைந்து செல்லாததால், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் 2 மணி நேரம் லத்தி சார்ஜ் நடத்த தொலைபேசியில் அனுமதி கேட்டு, பின்னர் பேக்ஸ் மூலம் அதிகாரபூர்வமாக அனுமதி கேட்டார்.
இதனிடையே, காவல் ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் பேக்ஸ் மூலம் 2 மணி நேரம் லத்தி சார்ஜ் செய்து போரட்டகாரர்களை கலைக்க அனுமதி வழங்கியுள்ளார். இச்சம்பவம் மதுரையில் மேலும் போராட்டத்தில் கலவரத்தை அதிகரிக்ககூடிய ஒன்றாக உள்ளது.