1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 25 மே 2020 (17:23 IST)

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் அவரவர் இல்லத்திற்கு சென்ற மணமக்கள்: பெரும் பரபரப்பு

border marriage
இ-பாஸ் செல்லாததால் மணமகன் மற்றும் மணமகள் தாலி கட்டிய உடனே அவரவர் இல்லத்திற்கு திரும்பிச் சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் கேரளாவைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருமணத்திற்கு மாநில எல்லையை தாண்டி செல்ல பிரசாந்த் இடம் இபாஸ் இல்லை இதனை அடுத்து அதிகாரிகள் அவரை கேரளாவுக்கு நுழைய அனுமதிக்கவில்லை
 
இந்த நிலையில் இரு வீட்டார் பேசி முடித்து தமிழக-கேரள எல்லையில் திருமணத்தை எளிதாக முடித்தனர். அதன் பின்னர் இபாஸ் கிடைக்கும் வரை அவரவர் வீட்டில் இருக்க மணமகன் மணமகளை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
 
இதனால் தாலி கட்டியவுடன் மணமகன், மணமகள் ஆகிய இருவரும் தத்தமது வீட்டிற்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது