1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:09 IST)

குரங்கினால் தவறி விழுந்த குழந்தை! – ஏற்காட்டில் சோகம்!

ஏற்காட்டில் குரங்கினால் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எஸ்டேட் பணியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் முன்னர்தான் குழந்தை பிறந்தது.

சம்பவத்தன்று நிஷாந்த் தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு குரங்கு அவரது பையை பிடுங்கி கொண்டு ஓடியிருக்கிறது,

உடனே அவர் குரங்கை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். அப்போது அவர் கையிலிருந்து பச்சிளம் குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. இதனால் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K