ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மே 2024 (11:40 IST)

வெயில் கொடுமையால் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக்.. சென்னையில் கட்டிட தொழிலாளி பரிதாப பலி..!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் வெயில் காரணமாக ஒரு சிலர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வெயில் நேரத்தில் தொழிலாளர்களை அதிகமாக வேலை வாங்க வேண்டாம் என்றும் குறிப்பாக நேரடியாக வெயில் படும் பணிகளில் இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக பணிபுரிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் சென்னைyஐ சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஹிட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றிய அவர் உயிர் இழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் கட்டுமானப் பணியின் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட வேலு என தெரிய வந்துள்ளதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
 
Edited by Siva