செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (10:17 IST)

தமிழக அரசை கலைக்க முடியுமா?: பாஜக எம்பியின் அதிரடி கருத்து!

தமிழக அரசை கலைக்க முடியுமா?: பாஜக எம்பியின் அதிரடி கருத்து!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததிலிருந்து தமிழக அரசு எப்பொழுது கலையும், அடுத்து தேர்தல் விரைவில் வர இருக்கிறது என பலரும் கூறி வந்தனர். அரசியல் வட்டாரத்தில் பரவலாக தமிழக அரசு கலைய இருக்கிறது என பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.


 
 
பாஜகவை சேர்ந்த தலைவர்களே சூசகமாக தமிழக அரசு கலைய உள்ளதாக கூறிவந்தனர். ஆனால் அது நடக்கவே இல்லை. அதிமுக தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து நடந்துதான் வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு நினைத்தால் கூட தமிழக அரசை கலைக்க முடியாது என பாஜக எம்பி இல.கணசேன் கூறியுள்ளார்.
 
பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு நினைத்தாலும் மாநில அரசைக் கலைக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவை அவ்வளவு எளிதாகவும் பயன்படுத்த முடியாது. அப்படியொரு சூழல் தமிழக அரசுக்கு எப்போதும் வரக்கூடாது என்றே நான் விரும்புகிறேன் என கூறினார்.