1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. :L Murugan and other BJP members arrest in thiruthani

தடையை மீறி யாத்திரை; எல்.முருகன் கைது; பாஜக போராட்டம் – திருத்தணியில் பரபரப்பு!

Tamilnadu
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதித்த நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தணி சென்ற எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்க முயற்சித்தனர். இதனால் போலிஸார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்து மாலை விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அன்னைக்கு கேலி செய்த ட்ரம்ப்பை இன்னைக்கு கலாய்த்த சிறுமி க்ரேட்டா! – வைரலாகும் ட்வீட்