திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (08:56 IST)

’மிஸ் யூ அப்பா’: கருணாநிதி பிறந்த நாளில் குஷ்பு டுவிட்!

’மிஸ் யூ அப்பா’: கருணாநிதி பிறந்த நாளில் குஷ்பு டுவிட்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் உள்பட பலரும் இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் கருணாநிதியின் புகைப்படமும் வைத்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி டுவிட்டரில் பல அரசியல் பிரபலங்கள் திரை உலக பிரபலங்கள் டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் திமுகவில் ஒரு சில வருடங்கள் இருந்த நடிகையும் தற்போதைய பாஜக பிரபலமுமான குஷ்பு தனது டுவிட்டரில் கருணாநிதி குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்
 
நான் ஒருநாள் கூட கருணாநிதியை உணராத நாளில்லை எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல் அவர் இருந்தார் என்றும், அவர் என்னுடைய மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார் என்றும், உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் என்றும், மிஸ் யூ அப்பா என்றும் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது