வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (07:30 IST)

கருணாநிதி பிறந்த நாளில் கனிமொழியின் கவிதைத்தனமான டுவிட்!

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது
 
திமுக தலைவர்களும், திமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களுடைய வீடுகளில் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் திமுகவின் முக்கிய தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி எம் பி எம் கருணாநிதியின் மகளுமான கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை கருணாநிதி குறித்து கவிதைத் தனமான ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் அந்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
 
அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் 
அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்
அவை நினைவுகளால்
நிரம்பி வழிகின்றன