திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:22 IST)

அரசை தட்டி கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருக்கின்றார்: குஷ்பு

kushboo
அரசு தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருக்கிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 
 
கன்னியாகுமாரியில் விவேகானந்தரின் 160 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ’ஒரு அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் அரசாங்கத்தின் செயல்களை மேற்பார்வை செய்யவும் தான் கவர்னர் இருக்கிறார் என்றும் அந்த வகையில் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பவராக நம்முடைய கவர்னர் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது அமைச்சர் பொன்முடி அவரை வெளியே போ என சைகை காட்டினார் என்றும் அது மிகப்பெரிய தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதற்கு முன்பு பெண்கள் பஸ்ஸில் ஓசியில் செல்வதாக பொன்முடி கூறியதையும் முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றும் தற்போதும் அதே நிலை தான் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran