மேற்குவங்கத்தில் மும்முனை போட்டி: ஆட்சியை பிடிப்பது யார்?
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 30 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி மம்தா பானர்ஜி கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார். அதுமுதல் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அவருடைய ஆட்சி மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் புதிய அவதாரம் எடுத்துள்ள பாரதிய ஜனதா மேற்கு வங்கத்தில் புதிய கூட்டணி அமைத்துள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அணியாகவும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியாகவும் பாஜக தனி அணியாகவும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் வெற்றி பெரும் என்றும் மம்தா பானர்ஜி முதல்வராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு அதிகப்படியான தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன