1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (16:12 IST)

டிவிட்டருக்கு குட்பை கூறிய குஷ்பு - காரணம் என்ன?

நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.


 

 
குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துகள், தொலைக்காட்சியில் தான் நடத்தும் நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். அதேபோல், அவரை வம்பிழுக்கும் இழுத்து கருத்து பதிவிடும் நெட்டிசன்களோடு கடுமையாக சண்டையிட்டும் வந்தார்.
 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் “டிவிட்டரிலிருது சிறிது நாட்கள் நான் விலகியிருக்க விரும்புகிறேன். மீண்டும் புத்தகங்கள் படிக்க விரும்புகிறேன். நான் டிவிட்டருக்கு அடிமையாகிவிட்டது போல் இருக்கிறது. கண்டிப்பாக மீண்டும் திரும்பி வருவேன். ஏனெனில் என் வாழ்க்கை எப்போது ஒரு திறந்த புத்தகம். என்னிடம் அன்பும், ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி. நான் இங்கு எல்லையென்றாலும் அதை நீங்கள் தொடர்வீர்கள் என நம்புகிறேன்.  எப்போதும் என்னை அதுபோலவே நேசியுங்கள். சந்தோஷமாக இருங்கள். 
 
இந்த தளத்தை நாட்டை முன்னேற்றுவதற்கு பயன்படுத்துங்கள். மாறாக பிளவுபடுத்த பயன்படுத்த வேண்டாம். கோபங்களை மறந்து மற்றவர்களிடம் அன்பை பகிருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.