வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (12:33 IST)

ஒன்லி பக்தி பாடல்கள் மட்டும்தான்..! – குலசை தசரா விழாவுக்கு கட்டுப்பாடுகள்!

Kulsai Dhasara
குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாடுகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.

தசரா திருவிழாவிற்காக கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தசரா திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


அதன்படி தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் அல்லாத பிற பாடல்களை பாடக் கூடாது. பக்தி பாடல்கள் அல்லாத பாடல்களை ஒலிக்கவும், நடனம் ஆடவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி டி.எஸ்.பி திருவிழா நடக்கும் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.