வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (13:56 IST)

உதயநிதி சிறுபிள்ளைத்தனமாகப் பேசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்: கேபி முனுசாமி

ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் பற்றி  ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது மகன் உதயநிதி சிறுபிள்ளைத்தனமாக பேசி உளறிக் கொண்டே மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என்று அதிமுக பிரமுகர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார் 
 
திமுகவினர் கடந்த காலங்களில் கோ பேக் மோடி என்று கூறினார்கள், ஆனால் தற்போது வெல்கம் மோடி என்று கூறுகின்றனர். இவ்வாறு தான் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர், உண்மையாகவே பாஜகவை எதிர்ப்பது அதிமுக மட்டும் தான் என்று கேபி முனுசாமி கூறினார் 
 
பாஜக 350 முதல் 400 தொகுதி வரை வெற்றி பெறுவோம் என்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் தேர்தல் முடிந்த பிறகு தான் அந்த மாயத்தோற்றம் விலகி உண்மையான ரிசல்ட் தெரிய வரும் என்று கூறினார் 
 
கோவையில் அண்ணாமலை எந்த இடத்தை பிடிக்கப் போகிறார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கேபி முனுசாமி தெரிவித்தார். 
 
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக ஒருதலைபட்சமாக  செயல்படுகிறது என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் கூறிய கேபி முனுசாமி ஆனால் இதனை வாக்கு பதிவுகளில் செய்ய முடியாது என்றும் மக்கள் சரியாக வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran