வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (12:46 IST)

திமுக வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, ஆ ராசா வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு?

a raja
வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு  பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வ் எளியாகியுள்ளது. அதே தொகுதியில் போட்டியிடும்அதிமுக வேட்பாளர் மனோ வேட்புமனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
கலாநிதி வீராசாமி மற்றும் மனோ ஆகிய இருவரும் பரஸ்பரம் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இரண்டு பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்புமனுக்கள் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாகவும், அதே தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவின் விஜய பிரபாகர், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், நாதகவின் கெளசிக் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு ஏற்பு. அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியின் வேட்புமனு மற்றும் 
 
Edited by Mahendran