1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:00 IST)

கிலோ கணக்கில் தங்கம், வைரம்.. பட்டுப்புடவைகள்..! – தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் ஆபரணங்கள்!

Jayalalitha
கர்நாடகாவின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக உள்துறை செயலாளர் நேரில் வந்து பெற்றுக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் நிரந்தர பொதுசெயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிக்கலா உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2015ல் சிறை தண்டனை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா பின்னர் உடல்நலக் குறைவால் இறந்தும் போனார். ஆனால் அவரது ஆபரணங்கள் மட்டும் கர்நாடக கருவூலத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அதை மீண்டும் தமிழக அரசிடம் திருப்பி கொடுக்க கர்நாடக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் நேரில் சென்று ஆபரணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்த்த பட்டுப்புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள், 91 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், அலங்காரா நாற்காலிகள், கட்டில், கண்ணாடி பொருட்கள் என ஏராளமான பொருட்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் கொண்டு செல்லப்பட்டன. பல ஆண்டுகள் கழித்து அவை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Edit by Prasanth.K