ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 8 மே 2017 (17:20 IST)

அசிங்கமாக திட்டிய குஷ்பு: உங்கம்மாவ உங்கப்பா வித்த மாதிரியா?

அசிங்கமாக திட்டிய குஷ்பு: உங்கம்மாவ உங்கப்பா வித்த மாதிரியா?

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தன்னை டுவிட்டரில் அசிங்கமாக திட்டிய ஒருவருக்கு அவரது பாணியிலேயே அசிங்கமாக திட்டி பொளேர் பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
நடிகை குஷ்பு டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுபவர். தனது வீட்டில் சமைப்பது, தனது பொழுதுபொக்குகள், பயணங்களின் போது எடுக்கும் புகைப்படங்கள் என பலவற்றை டுவிட்டரில் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வார்.
 
சில நேரங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். விமர்சிப்பவர்களுக்கு சாமர்த்தியமாக பதிலளிப்பார். சிலர் அசிங்கமாக திட்டும் போது அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்.


 
 
இந்நிலையில் தமிழக காங்கிரஸில் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று குஷ்பு போன்ற தலைவர்கள் பிரதமரை ஒருமையில் பேசுகிறார்கள் என்று பதிவிட்டார் வைதியா என்ற டுவிட்டர் பயனாளி.


 
 
வைதியாவின் அந்த டுவிட்டில் பாலாஜி பாண்டுரங்கன் என்பவர் சுந்தர் விற்பனை செய்யும் தயாரிப்பு குஷ்பு என தரக்குறைவாக கமெண்ட் போட்டார். இதனை பார்த்த குஷ்பு கொந்தளித்துவிட்டார்.


 
 
உங்க அம்மாவை உங்க அப்பா விற்றது மாதிரியா? அல்லது நீ உங்க வீட்டு பெண்களை விற்றது மாதிரியா? என அவரது பாணியிலேயே அவருக்கு அசிங்கமாக தக்க பதிலடி கொடுத்தார் குஷ்பு.