வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (23:04 IST)

தேங்காய் எண்ணெயில் கலப்படம்: 74 கம்பெனிகளுக்கு தடை

கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த 74 தனியார் கம்பெனிகளின் தேங்காய் எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதில் 9 கம்பெனிகள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தினந்தோறும் சமையலுக்கும் உடலுக்கும் பயன்படுத்தும் எண்ணெய் தேங்காய் எண்ணெய். இதில் அதிகளவில் கலப்படும் செய்யப்படுவதாகவும், இதனால் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் கேரள அரசு அதிகாரிகள் அம்மாநிலத்தில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய்களை பரிசோதனை செய்ததில் 74 தனியார் கம்பெனிகள் கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவற்றுக்கு தடை விதித்துள்ளனர்.  தடை செய்யப்பட்ட 74 நிறுவனங்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது