வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (23:29 IST)

கவரைப்பேட்டை ரயில் விபத்து! கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில்சேவை மொத்தமாக நிறுத்தம்!

கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் விபத்திற்குள்ளானதின் எதிரொலியாக சென்னையில் இருந்து பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

சென்னை பெரம்பூரில் இருந்து இரவு 7.44 மணிக்கு புறப்பட்ட பாக்மதி விரைவு ரயில் திருவள்ளூர், கவரைப்பேட்டை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது முன்னால் நின்ற சரக்கு ரயிலில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் கவிழ்ந்த நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் கவரைப்பேட்டை விபத்து காரணமாக சென்னையிலிரிந்து புறப்படும் ரயில்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரல் - டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில், தன்பந்த் விரைவு ரயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை - கான்பூர் எக்ஸ்பிரஸ் இரவு 11.35 மணிக்கு பதிலாக அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில் போக்குவரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி - ஹவுரா விரைவு ரயில், எர்ணாகுளம் - டாடாநகர் விரைவு ரயில், காகிநாடா - தன்பாத் விரைவு ரயில் ஆகியவற்றை மாற்று பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

 

Edit by Prasanth.K