திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (18:47 IST)

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை!

கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை 4 நாட்கள் கழித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் எந்த ஏற்றமும் இல்லை, எந்த பின்னடைவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இன்று காலை திடீரென கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து அவரது மனைவி தயாளு அம்மாள் மதியம் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். இதனால் மீண்டும் பழைய படி சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. 
 
அதன்படி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும். வயதுமூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புக்களை செயல்பட வைப்பத்தில் சவாலாக உள்ளது. அவரது முக்கிய உஅடல் உறுப்பின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. 
 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உதவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் நிலை, சிகிச்சைக்கு எவ்வாறு ஒத்துழைக்கின்றனது என்பது பொருத்தே கணிக்க முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.