செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:22 IST)

விஜய் அவசரப்பட்டுவிட்டார்.. பார்வார்டு பிளாக் பொதுச்செயலாளர் கருத்து..!

vijayy
அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் விஜய் அவசரப்பட்டு விட்டார் என அகில இந்திய பார்வார்டு விழா கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் பேட்டி அளித்துள்ளார். 
 
நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தார்.. மேலும் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன், விஜய் அவசரப்பட்டு அரசியல் முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை அவசரப்பட்டு தொடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன் என்று கூறிய அவர், விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதால் திமுக அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறினார். 
 
மேலும் விஜய் இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவை செய்து அதன் பின் அவர் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
 
Edited by Siva