திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2019 (10:32 IST)

ஐட்டம் டான்ஸ் ஆடுற நீயெல்லாம் பேசலாமா? தரக்குறைவாக பேசிய நபரை ஓட விட்ட கஸ்தூரி!!!

ஐட்டம் டான்ஸ் ஆடுற நீயெல்லாம் பேசலாமா? தரக்குறைவாக பேசிய நபரை ஓட விட்ட கஸ்தூரி!!!
டிவிட்டரில் தன்னை தரக்குறைவாக பேசிய நபருக்கு செருப்படி பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, திரைத்துறை, கிரிக்கெட், அரசியல், சமூக அவலங்கள் பற்றின தனது கருத்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்வார். பலர் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர்.
 
இந்நிலையில் கஸ்தூரி டிவிட்டரில் ஜாதிக்காக சண்டை போட்டு நேரத்தை, உணர்ச்சிகளை வீணடிக்க வேண்டாம். இப்போது தண்ணீர் பிரச்னை நிலவுகிறது..அதற்காகதான் நாம்  சண்டை போட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
ஐட்டம் டான்ஸ் ஆடுற நீயெல்லாம் பேசலாமா? தரக்குறைவாக பேசிய நபரை ஓட விட்ட கஸ்தூரி!!!
இதற்கு சிலர் கேவலமான முறையில் கஸ்தூரியை திட்டி மெசேஜ் அனுப்பியிருந்தர். நபர் ஒருவர் ஐட்டம் டான்ஸ் ஆடுற நீயெல்லாம் பேசலாமா என்றும் இன்னொரு நபர் கஸ்தூரியை இரவு ராணி கஸ்தூரி என அசிங்கமாக பேசி கமெண்ட் போட்டிருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அந்த நபர்களின் டிவிட்டர் ஐடியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அது என்னவோ தெரியலை.  தரக்குறைவான தனிமனித தாக்குதல்களை  அடுக்கும்  கனவான்கள் 100க்கு  90 பேர்  பகுத்தறிவு/சுயமரியாதை க்ரூப்பாவே இருக்கிறார்கள்...  என்ன செய்ய, முன் ஏறு போகும் வழியில்தானே  பின்னேறு போகும். தலைவனுக்கு சற்றும் சளைக்காத திதிசொ க்கள். என கூறியுள்ளார்.
 
இதனை பார்த்தவர்கள் கஸ்தூரி சரியான செருப்படி பதிலடி கொடுத்துள்ளார் என அவரை பாராட்டி வருகின்றனர்.