1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (16:34 IST)

திடீர் பள்ளத்திற்கு விடிவு காலம் எப்போது? - அச்சத்தில் கரூர் மக்கள் (வீடியோ)

கரூரில் மூன்று வருடங்களாக நீடிக்கும் பொதுமக்களின் பீதிக்கு கரூர் நகராட்சி பதில் அளிக்க வேண்டுமென கரூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 
கரூர் என்றாலே, தமிழக அளவில் மட்டுமில்லாமல், உலக அளவில் டெக்ஸ்டைல் நிறுவனம் மற்றும் பஸ் பாடி என்ற பெயர் மாறி, அடிக்கடி பள்ளம் விழுமே அந்த ஊரா என்ற நக்கல் கேள்வியும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 
 
இந்நிலையில், நேற்று இரவு திடீரென்று சிறிய அளவில் மழை பெய்தது, இந்த சிறு மழைக்கே, கரூர் அண்ணா வளைவில் அருகே, பழைய நீதிமன்றத்தின் அருகே, திடீரென்று பெரிய பள்ளம் நள்ளிரவு உருவானது. இதனை தொடர்ந்து, ஆங்காங்கே கரூர் நகராட்சியின் சாலைகளில் செல்வோர்கள் எங்கு, எப்போது பள்ளம் விழுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்ததோடு, இரு சக்கர வாகனத்திலும், பாதசாரிகளாகவும் பயணிக்கின்றனர். 
 
கடந்த 2015ம் ஆண்டு, நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திடீர் பள்ளம் அடுத்தடுத்து 2016, 2017 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்த நிலையில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கியதாலே, இந்த திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அந்த கட்டுமானப்பணிகள் சரியாக செய்யாததினால் தான் இந்த அளவிற்கு திடீரென்று பள்ளங்கள் விழுவதாகவும், சிறிய அளவு பெய்த மழைக்கே, இந்த பள்ளம் என்றால், பெரிய அளவில் மழை பெய்த போது என்ன நடக்கும் என்று அச்சத்தில் கரூர் மக்கள் ஆழ்ந்துள்ளனர்
 
பேட்டி : முரளி – பொதுமக்கள் - கரூர்
 
-சி.ஆனந்தகுமார்