திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (11:06 IST)

நிர்மலா தேவி விவகாரம் - நீதிமன்றத்தில் கருப்பசாமி சரண்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பி.எச்.டி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.  
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
 
எனவே, நிர்மலா தேவி மற்றும் முருகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கருப்பசாமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
 
இந்நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் பி.எச்.டி மாணவர் கருப்பசாமி இன்று காலை சரணடைந்தார்.