தொழிலதிபரை தாக்கும் கருணாஸ் நண்பர்கள் : அதிர்ச்சி வீடியோ
சென்னையில் உள்ள மதுபார் ஒன்றில் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் நண்பர்கள், தொழிலதிபரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் தனது நண்பர்களுடன் எம்சிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது, பரணீஸ்வரன் என்ற நபரோடு கருணாஸின் நண்பர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, பரணீஸ்வரனை கருணாஸின் நண்பர்கள் கடுமையாக தாக்கினர். இதைத் தொடர்ந்து பரணீஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.