1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (08:25 IST)

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
 

 
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக நடிகர் கருணாஸ் உள்ளார். இவர், சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்றும், திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளதாகவும், அதற்கு உடனே  தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.