புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (16:50 IST)

அதிமுக ஆட்சி அவ்ளோ தான்: சொல்கிறார் பாஜக அமைச்சர்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி இன்னும் எத்தனை காலம் இருக்கும் என்பதே தெரியாது. அந்த கட்சி அழியும் நிலையில் உள்ளது என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணான் கூறியுள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலை தமிழகமே உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக, தினகரன், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்கள் முழு பலத்துடன் மோதுகிறது. வெற்றி யாருக்கு என்பது புதிராகவே உள்ளது.
 
இந்நிலையில் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா அதிகமாக நடைபெறுவதாக பாஜக தொடர்ந்து புகார் அளித்து வருகிறது. அதே நேரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இதனையடுத்து பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் மக்களை மாறி மாறி ஆட்சி செய்தாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
 
அதிமுக சாயும் கோபுரம் போன்ற நிலையில் உள்ளது. அதன் ஆட்சி எத்தனை காலம் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அழியும் நிலையில் அதிமுக உள்ளது. திமுகவும் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என பேசினார்.