திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (10:49 IST)

காதில் செய்தி சொன்ன ஸ்டாலின்: கைகுலுக்கிய கருணாநிதி!

திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
 
தங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கம் இந்த தீர்ப்பின் மூலம் துடைத்தெரியப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு குறித்த செய்தி வந்த பின்னர் தான் மகிழ்ச்சியுடன் கோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்றுள்ளார் ஸ்டாலின்.
 
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுடன் கருணாநிதியை சந்திக்க சென்ற ஸ்டாலின் தீர்ப்பின் விபரங்களை கருணாநிதியின் அருகில் சென்று அவரது காதில் கூறியுள்ளார். இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியுடன் பேராசிரியர் அன்பழகனுக்கும் தனக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததாக மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.