கருணாநிதி சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட மதுரை ஜோடி!
கருணாநிதி சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட மதுரை ஜோடி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை மரியாதை செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை முன் மணிகண்டன் - பிரியா ஜோடி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்
இதனை அடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் மதுரை திமுக நிர்வாகிகள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது