1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (09:35 IST)

தேர்தல் பத்திர வழக்கின் தீர்ப்பு பாஜகவை பாதிக்காது.. கார்த்திக் சிதம்பரம்

Karthi Chidambaram
தேர்தல் பத்திரம் குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்குவது சட்டத்திற்கு முரணானது என்றும் இதன் மூலம் வாங்கும் நன்கொடைகளில் முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தேர்தல் பத்திர வழக்கின் தீர்ப்பு பாஜகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்

தேர்தல் பத்திரம் மூலம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு குறிப்பிடப்படாததால் பாஜகவுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் ஏற்கனவே அந்த கட்சி தேவையான அளவு நிதியை வாங்கி விட்டதால் அந்த கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இனிமேல் பணம் வாங்க கூடாது, அப்படியே வாங்கினால் அதற்கான கணக்கை காட்ட வேண்டும் என்று மட்டுமே தீர்ப்பில் கூறியுள்ளதால் ஏற்கனவே வாங்கப்பட்ட பணம் அந்தந்த கட்சிகளுக்கு உரியது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Edited by Siva