திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (13:32 IST)

மேகதாது அணையா? அச்சத்தில் தமிழகம்; பலே பிளான் போட்ட கர்நாடகா முதல்வர்

மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் குமாரசாமி தமிழக தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.

 
கர்நாடகாவில் மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தாரளமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. 
 
ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை கட்ட திட்டமிட்டது.
 
ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான் என்ற அச்சத்தில் தமிழகம் உள்ளது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
 
இதனால் மேகதாது அணை கட்டுமான பணி கிடப்பில் உள்ளது. இந்நிலையில் மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் குமாரசாமி தமிழக தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
 
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் மற்றும் பவானி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.
 
இதுபோன்ற சூழ்நிலைகளில் விணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது அணை பொருத்தமாக இருக்கும். மேகதாது அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து, தட்டுபாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
 
தமிழகத்திற்கு தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக இருக்கும். தமிழகத்திற்கு எந்த நேரத்திலும் தண்ணீர் வழங்க பிக்சர் டெசாபிட் போல தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். எனவே தமிழக அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.