வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (15:34 IST)

போலீஸ் பாதுகாப்பு கோரிய சூர்யா சிவாவின் மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

tiruchy surya shiva
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பாஜக பிரமுகர் சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த பின் நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்த போது ’இப்போதெல்லாம் ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷன் ஆக மாறிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த மனு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ’குற்ற வழக்குகள் சூர்யா சிவா மீது இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran