1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (20:23 IST)

தி.மு.க அரசு தான் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை: கனிமொழி டுவிட்

திமுக அரசுதான் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என கனிமொழி சற்றுமுன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ஒரு பக்கம் வேட்பாளர் பட்டியல் இன்னொரு பக்கம் பிரச்சாரம் என அதிமுக திமுக என இரண்டு பெரிய கட்சிகளும் சுறுசுறுப்பாக உள்ளன 
 
இந்த நிலையில் சமீபத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண் எஸ்பியின் புகார் குறித்து கனிமொழி திமுக எம்பி கனிமொழி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
 
பாலியல் தொந்தரவிற்கு உள்ளான பெண் எஸ்.பி யின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.பி.கண்ணன் தேர்தல் ஆணையத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது தாமதமான நடவடிக்கை.இ.பி.எஸ் அரசு,நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியது.தி.மு.க அரசு தான் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை