செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (12:50 IST)

'கண்ணில் கோளாறு’ என கூறிய முதல்வருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கனிமொழிக்கு தெரியவில்லை என்றால் அவரது கண்ணில் கோளாறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இதற்கு தற்போது கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார் 
 
எனக்கு கண்ணில் கோளாறு என்றால் அதனை சரி செய்து விடலாம். ஆனால் தமிழக முதல்வராக தமிழ்நாட்டிற்கே கோளாறு என்று கனிமொழி கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி யார் காலில் விழுந்து பதவியை பெற்றாரோ அவருக்கே துரோகம் செய்தவர் என்றும் அவருக்கு மட்டுமன்றி தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகிறார் என்றும் கனிமொழி கூறினார்.
 
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என கேள்வி எழுப்பிய ஓ பன்னீர்செல்வம், துணை முதல்வரான பிறகு அமைதியாகி விட்டார் என்றும் தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் விரைவில் வந்து கொண்டிருக்கிறது என்றும், அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என்றும் கனிமொழி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்,