வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (15:41 IST)

மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல் செய்வதா? அண்ணாமலைக்கு கனிமொழி கண்டனம்

மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் படகில் சென்று அரசியல் செய்வதா என திமுக எம்பி கனிமொழி அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றம் சாட்டியுள்ளார் 
 
சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்டகால போராட்டமாக உள்ளது என்றும் இதற்கு நிரந்தர தீர்வு காண கண்டிப்பாக திமுக அரசு வழிவகை செய்யும் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது உள்ளது என்றும் இனிமேல் நிச்சயமாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் மழைக்காலத்தில் உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாகவும் மழை நேரத்தில் மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு அரசியல் செய்வது நாகரிகமற்ற செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்