திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (12:39 IST)

விவாகரத்து செய்தி குறித்து நடிகை தரும் விளக்கம்

சுசி கணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கனிகா.


 


அப்படத்திற்கு பிறகு, பல வெற்றி படங்களை நடித்துக்கொண்டு இருந்த அவர், ஷியாம் ராதாகிருஷ்ண என்பவரை காதலித்து திடீரென திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கனிகா, தன் கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியானது.

இதற்கு தன் முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்த கனிகா, கூறியதாவது. ” 8 வருடத்திற்கு முன் எப்படி எவ்வளவு லவ் வோடு இருந்தோமோ, அதே போலத்தான் இன்றும் உள்ளோம். எனது 5 வயது மகன் சாய் ரிஷியோடு சந்தோசமாய் உள்ளோம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று  கேட்டுக்கொண்டார்.