செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (12:13 IST)

சயன கோலத்தில் நாகங்கள் பாதுகாக்க குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்!

இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா பேட்டி

 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  
 
ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார். இன்று அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 
இத்தோடு இன்னும் 40 வருடங்கள் கழித்து 2059 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் அத்திவரதர். இந்நிலையில் இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டியளித்துள்ளார். 
 
எனவே, இன்று அதிகாலை முதலே அத்திவரதருக்கான பரிகார பூஜைகள் துவங்கியது. மேலும், சிலைக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தைலங்கள் பூசப்பட்டு குளத்தில் வைக்கப்பட்டு பின்னர் நீர் நிரப்பப்படுமாம். 
 
சயன கோலத்தில் குளத்திற்குள் செல்லும் அத்திவரதரின் தலை பகுதியில் 5 தலை நாகத்தின் சிலை வைக்கப்படுகிறது. அவரை சுற்றி 16 ஐந்து தலை நாகங்கள் காவல் காக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.