1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:52 IST)

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்; துரைமுருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று தமிழக சட்டமன்றம் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் துரைமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக பொது செயலாளராக உள்ள துரைமுருகன் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சராகவும் உள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக அவர் சட்டசபையில் பங்கேற்று வரும் நிலையில் இதுகுறித்து இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அப்போது அவர் “எனக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக உள்ளார். அவையை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும் திறமையுள்ளவர். நூற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்தில் 50 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார்” என கூறியுள்ளார்.