அண்ணா பல்கலைகழகத்தில் வேலை தருவதாக மோசடி! – துணை பதிவாளர் கைது!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (12:28 IST)
அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த துணை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதிலிருந்து அண்ணா பல்கலைகழகம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கி தருவதாக பல்கலைகழக துணை பதிவாளர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைகழக துணை பதிவாளரான பார்த்தசாரதி, பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக 25 பேரிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :