1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:23 IST)

கடற்கரையில் களிக்கும் மக்கள்... கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை கடற்கரைகளில் மக்கள் கூடியதால் சென்னையில் தொற்று பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 1,990 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆகஸ்டு 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளி அரங்கங்களில் கூட்டங்கள், மெரினா கடற்கரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கடற்கரைகளுக்கு செல்ல தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனையும் மீறி ஞாயிற்றுகிழமையான நேற்று பலரும் கடற்கரைகளுக்கு சென்றனர். மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால், அதன் அருகில் இருக்கும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட சிறிய கடற்கரைகளுக்கு சென்றனர். பலரும் முகக்கவசத்தை அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் கடற்கரைகளில் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.